Friday, March 24, 2017

ரஜனிகாந் அவர்களே வர வேண்டாம்

ரஜனிகாந் அவர்களே வர வேண்டாம்
-----------------------------------------------

ரஜனி காந் அவர்களே வரவேண்டாம். இத்தனை காலம் எம் மக்கள் பட்ட பட்டுக்கொண்டிருக்கின்ற துன்பங்கள் உங்களுக்கு தெரியாதா...? எவ்வாறு இப்போ
இந்த ஞானோதயம் திடீரென வந்தது.....?

2.0 படத்தை வெற்றி பெற செய்வதற்கு நீங்கள் போடும் அருமையான நாடகம்.
கபாலியில் தமிழ் நாட்டு மக்களை போலியான விள்ம்பரத்தில் மூலம் பகல் கொள்ளை அடித்து கோடிக்கனக்கில் உழைத்தீர்கள்.விமானத்தில் கபாலி பெயர்
என்று மயக்க விளம்பரம் செய்து கண்ணை கட்டிவிட்டு தமிழக மக்களிடம் பகல்
கொள்ளை அடித்தீர்கள். இனிமேல் இதெல்லாம் சரிவராது என்பது உங்கலூக்கு
நன்றாக தெரிந்து விட்டது. தமிழ் நாட்டில் ஜல்லி கட்டு போராட்டம் மூலம் என் உறவுகள் விழித்து விட்டார்கள். உங்களூக்கு அது ஒரு மாடு தழுவுதல் போராட்டம்
எங்கலுக்கு சினிமாவில் மயங்கி இருந்த தமிழக இளைஞன் சுயாமாக சிந்திக்க
தொடங்கிய போராட்டம் என்றே நாங்கள் பார்கிறோம் .

எங்களை பொறுத்த வரையில் தலைவர் என்று எங்கள் உதடுகள் உச்சரிக்குமானால் ஈழதமிழன் இனம் இருக்கும் வரை அது எம் தேசிய தலைவரையே உங்களை சினிமா காரர்களும் ஊடகங்கலும் வயிற்று பிழைப்புக்காக அந்த மூன்று சொல்லை உச்சரிக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஈழதமிழரை பொருத்த மட்டில் அந்த மூன்று எழுத்துக்கு
சொந்தமானவர் எம் தேசிய தலைவரே.

ஒருமுறை ஈழத்தமிழரின் பெரும் துயர் நடைபெற்ற போது உஙளிடம் நிருபர் கேள்வி கேட்டார் ஈழ தமிழர் பிரச்சனைக்கு உங்கள் கருதென்ன..? என்று கேட்ட போது எமது நாட்டில் 1000 பிரச்சனையுள்ளது அதை தீர்க்க வழியை காணோம் என்றீகள் . நாங்கலும் அதைதான் சொல்கிறொம். உங்களால் முடிந்தால் பட்டினியோடு போராடும் விவசாயிகளுக்கு உதவுங்கள். நீங்கள் கர்னாடக காரர் உங்க முதலீடு நிறைய அங்கு உண்டு .நீங்கள் மறைமுக மாக அழுதம் கொடுத்தாளே எத்தனயோ விடயம் சாதிக்கலாம். நீங்கல் எஙகலுக்கு உதவிவதை
காட்டிலும் உங்களை வாழவைக்கும் என் தமிழக விவசாயிகளுக்கு உதவுங்கள்.

எதற்கு எடுத்தாலும் உங்களுக்கு பயம் அரசியல் ஆக்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் அப்போ எதற்கு இங்கு வருகிறீர்கள்...? இது அரசியல் இலையென்றால் உங்க சுயலலத்துக்காக வருகிறீகள். 2.0 வெற்றி பெறவைக்க நீங்கள் போடும் நாடகம் என்பதை  ஒப்பு கொள்கிறீர்கள்.
இப்போ தமிழக இளைஞர்கள் விழித்து கொண்டார்கள். உஙக்ளுக்கும் உங்க குடும்பதுக்கும் பயம் வந்து விட்டது. அதற்காக இந்த நாடகம் எனப்தை நாம் அறிவோம். நாம் புதியுள்ளவர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

மதிப்புக்குறிய இந்திய பிரதமர் மோடி அவரகள் யாழ்ப்பாணம்  வந்தபோது நாம் ஆதரித்தோம் வ்ரவேற்றோம் இந்திய அரசு தமிழருக்கு பல துரோகத்தை செய்தாலும் நாம் அவருடைய வருகையை வரவேற்றோம் அது எங்கள் அரசியல் பண்பாடு. எமக்கு ஒரு துயர் என்றால் போராடுவது தமிழக உறவுகள் அவர்கள் இல்லாமல் எம் போராட்டம் வெற்றி பெற முடியாது. நீங்கள் சுயனலத்துக்காய் எம் உறவை கொச்சை படுத்தாதீர்கள்.

நீங்கள் ஒரு நடிகர் அதுதான் ஈழ தமிழர் மத்தீயில் உங்கலுக்கான அந்தஸ்து.
அதை உலகெங்கும் உள்ள ஈழதமிழர் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றால்
இப்படி பட்ட அரசியல் நாடகம் ஆடாமல் நடிகராகவே இருங்கள்

தயவு செய்து சினிமா ஆவளர்கள் இதற்கு கருத்து சொல்ல வேண்டாம். உணர்வுள்ள தமிழன் கருத்தை சொல்லுங்கள் முடிந்தால் இந்த கட்டுரைய ஆயிர கணக்கில் பரிருங்கள் பார்க்கவேண்டியவர்கள் பாக்கட்டும்

&
புதினம் உலக நாதன்
யாழ்ப்பாணம்

No comments:

Post a Comment