Saturday, February 18, 2017

இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது

இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
----------------------------------------------
வியப்பாக இருக்கிறதா....?
அதிர்ச்சியாக இருக்கிறதா.....?
இதுதான் உண்மை....................
இனி ஒரு மெரினா புரட்சி.......
தோன்றவே தோன்றாது..............!!!

மெரினா போராட்டம் ஒரு.......
இயற்கை இயக்கத்தால்......
தோன்றியது...........................
தலைவன் இல்லை.......
தோற்றியவனும் இல்லை.....
முடித்து வைத்தவனும் இல்லை.......
அது இயற்கை இயக்கத்தால்.....
தோன்றிய அற்புத போராட்டம்....!!!

எப்படி இணந்தார்கள்.....?
யார் இணைத்தார்கள்.......
எப்படி இப்படி ஒரு மாபெரும்.....
சக்தி திரண்டது..........?
எல்லமே ஒரு விசித்திர நிகழ்வு.......
எத்தனை சமூக ஊடகம்.....
பங்களிப்பு செய்தாலும் ......
அதற்கும் மேலாக ஒரு சக்தி.....
இயக்கியது என்றால் அதுமிகையல்ல.....!!!

இன்று அதே ஊடகங்கள் இருகின்றன.....
நாளையும் இருக்கத்தான் போகிறது.......
எந்த காலத்திலும் மெரினாபோல்.........
ஒரு போராட்டம் இனி எப்போதும்....
தோன்ற போவதுமில்லை.......
தோற்றிவிகக்வும் முடியாது......
மெரினா போராட்டம் ஒரு......
இயற்கை இயக்கத்தால் தோன்றியது.......!!!

&
கவிப்புயல் இனியவன்

Friday, February 17, 2017

ஜெயலலிதாவை கூடவே இருந்து குழிவரை

ஜெயலலிதாவை கூடவே இருந்து குழிவரை கொண்டு சென்றதுஉண்மையாக தான் இருகுமோ.....?
நம்மில் இருக்கும் ஒரு பலவீனம் தான் நம்மில் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்த காரணம். அந்த பலவீனத்தை பிறருக்கு சொல்ல முடியமல் இருக்கும் போது மரணம்வரை ரகசியமாகவே இருக்கும்.

Friday, February 10, 2017

அதிமுக 2016 தேர்தலில் கண்ட தோல்விகள்

அதிமுக 2016 தேர்தலில் கண்ட தோல்விகள்
-----
சுமார் 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் .என்று நம்பியிருந்தனர் கிடைத்தது 134 தொகுதி
இது அதிமுக பெரும் அதிர்ச்சி . மேலும் இனிமேல் தனிகட்சியாக போட்டியிட முடியாது என்பதை 
நன்கு உணர்த்திவிட்டது .
98 உறுப்பினர்களை கொண்ட எதிர் கட்சி தோன்றியது பெரும் தோல்வி . சட்டசபையில் கடும்
சவால்களை எதிர் நோக்கவேண்டியிருக்கும் . ஆனால் இரண்டுமே திராவிட கட்சியாக இருப்பதால்
ஒரே உள்ளுடன் தானே . ஒரு கம்யூனிட் கட்சியை தமிழக மக்கள் தேர்வுசெய்யாதது . திராவிட கட்சிகள்
தவறை சுட்டி காட்ட வழிவகுக்க வில்லை .
தி மு க 2016 தேர்தலில் கண்ட தோல்விகள்
--------
ஆட்சி மாற்றம் வரும் . என்று 100 சதவீதம் நம்பினர் .நடக்கவில்லை .
கலைஞர் ஸ்ராலினை முதலவராக பார்க்கும் கனவு பலிக்கவில்லை .
கலைஞர் காலத்துக்கு பின் திமுக கட்சி 3 பகுதியாக சிதறப்போகிறது.

இன்றே சொல்கிறேன் மறந்துடாதீர்

இன்றே சொல்கிறேன் மறந்துடாதீர்

1) 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பஜக வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு கணிசமான அளவு வெற்றி பெறும்.
2) 2021 ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வுடன்
பமக இணையும் பஜக ஏற்கனவே இணைந்து இருப்பதால் அதிமுக 3 வது முறையும் வெற்றி பெறும்

கபாலி ஒரு முன்னோட்டம்

கபாலி ஒரு முன்னோட்டம்
***************************************
கபாலி வெற்றி பெறுமா ...? இதுதான் இன்றைய பலரின் கேள்வி ...?
கண்ணை மூடிக்கொண்டு நான் அவரின் ரசிகன் என்பவர்கள் ..
நிசசயம் வெற்றி நம்ம தலைவன் தோற்கமாடடான் என்றெல்லாம் ....
கூறிவிடலாம் அது அவர்களின் பற்று மட்டுமே ......!!!
என்னை பொறுத்தவரையில் ரஜனிகாந்த் என்பவர் ஒரு நல்ல
கதாநாயகன் இல்லை . நல்ல வில்லன் . என்ன குழப்பிறேனா ...?
இல்லை இதுதான் உண்மை .
ரஜனிகாந்த் வில்லனாக அறிமுகமாகிய மூன்று முடிச்ச்சு முதல் ....
வெற்றி பெற்ற படங்களை தொகுத்து பாருங்கள் நான் சொல்வது
புரியும் . எந்த படத்தில் ரஜனி கதா நாயகன் வேஷம் மட்டும்
போட்டு நடித்தாரோ அத்தனை படமும் தோல்வி . அண்மை கால
லிங்கா - வரை பொருந்தும் .
எந்த படத்தில் வில்லன் வேஷம் இடையில் போட்டு நடித்தாரோ ....
அந்த படங்கள் வெற்றி . சந்திர முகியில் " வேடடையன் "
சிவாஜியில் " மொட்ட பாஸ் " எந்திரனில் "சிட்டி " இப்படி சொல்லிக்கொண்டே
போகலாம் .
எனவே கபாலியில் ஏதாவது ஒரு வில்லன் வேஷம் வந்தால் வெற்றி பெரும் ...!!!
இன்று ரஜனிகாந்த் வியாபார நிறுவனங்களுக்கும் . அரசுக்கும் தேவைப்படும்
பிரபல நபராக இருப்பதால் மிகை படுத்தல் சாதாரண விடயம் . இதை வைத்து
வெற்றி தோல்வி நிர்ணயிக்க முடியாது
வணக்கம்
புதினம் உலக நாதன்

அம்மா திராவிட முன்னேற்றகழகம் நிச்சயம் உருவாகும்

அம்மா திராவிட முன்னேற்றகழகம்
 நிச்சயம் உருவாகும்
--------------------------------------------------
தமிழ் நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அம்மாவின் இழப்பு அண்ணாதிராவிட
கழகத்துக்கு பெரும் நெருக்கடியையும் சவால்கலையும் தோற்றிவித்துள்ளது.
என்பது யாவரும் அறிந்த உண்மையே அடுத்து சில மாதங்களில் பல்வேறு
அரசியல் திருப்பங்கள் ஏற்படபோகிறது என்பது நிச்சயம்
1) கட்சியின் செயலாலர் சசிகலாவை கழகம் ஏற்றால் அ தி மு க உடையும்
அப்போது அம்மா திராவிட முன்னேற்றகழகம் என்னும் புதிய கட்சி உருவாகலாம்.இந்த கட்சியை தோற்றுவிக்க பலகட்சிகள் தூண்டிகொண்டு இருக்கும். இன்று பெரும் கட்சியாக இருக்கும் அ தி மு க தேசிய கட்சிகலுக்கு பெரும் தடையாகஇருக்கிரது. இந்த கட்சியை இரண்டாக உடைத்தாலே தமிழ் நாட்டில் அவர்கள்எதிர்பார்க்கும் வெற்றியை பெறமுடியும்.
2) தற்போதுள்ள முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மக்கள் மத்தியில் முதல்வராக
ஏற்று கொள்ளும் அளவுக்கு தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் மனதில் இடம் பிடிக வில்லை. இரண்டு முறை மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. நியமனம் பேற்ற முதல்வரே. அம்மாவின் சிந்தனையை செயல் படுத்து முதல்வராகவே இருந்தவர். எனவே தனி தீர்மானம் எடுகும் திறன் அவரிடம் இல்லை என்பதே தமிழ் நாட்டுமக்க்கள் மத்தியில் வலுவாக பதிந்துள்ள மறுக்க முடியாத உண்மை. எனவேமக்கள் மத்தியில் ஆளுமையுள்ள முதல்வராக அவர் மாறுவதற்கு காலம் எடுக்கும்.அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும்.
3) இன்னும் சில மாதங்களில் அதிமுக கழகத்தில் இருந்தவர்கள் தி மு க நோக்கி
நகர வாய்ப்புண்டு. சில முக்கிய பிரதி நிதிகள் கூட தி மு க வில் இணைவார்கள்
தி மு க வுக்குள்ளும் பலபிரச்சனைகள் தோன்றும். நிச்சயம் அங்கு குடும்ப சிக்கல்
தோன்றும்.தலைவர் இருக்கும் வரை அக்கட்சியும் ஒன்றாக இருக்கும்.
4) மொத்ததில் தேசிய கட்சிகளின் செல்வாக்கு அடுத்த தசாப்தங்களில் தமிழ் நாட்டில் வலுபெரபோகிரது என்பது மட்டும் உறுதி
&
புதினம் உலக நாதன்

அ தி மு க பொதுக்கூட்டம் 29 12 2016 என்ன நடக்கும்.....?

அ தி மு க பொதுக்கூட்டம் 29 12 2016 என்ன நடக்கும்.....?
--------------------------
1) பொது செயளாலர் O.P .S தான் நியமிக்கப்படுவார் போல எனக்கு தோனுது
சசிகலா நியமிக்க பட வாய்ப்பு மிக குறைவு. சசிகலவே தான் விட்டு கொடுப்பதுபோல் விட்டு கொடுக்கலாம்.
2) O . P . S வலுவான முதலமச்சராக வருகிறார். செயலாலராக தெரிவு செய்த பின்
பல அ தி மு க பிரமுகர்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு.
3) ஜே. தீபா அ தி மு க வில் முக்கியம் பெற போகிறார். ஊடக பேச்சாலர் சரசு நிலை கவலைக்கிடமாகும். ஊடக பேச்சாலர் மாற்ற படலாம்.

எதிர்வுகூறல்
புதினம் உலக நாதன்

மாணவர் இளைஞர் போராட்டம் பூரண வெற்றி

மாணவர் இளைஞர் போராட்டம் பூரண வெற்றி
------------------------------------------------------------
உலக வரலாற்றில் இப்படி ஒரு புரட்சி இனி ஏற்பட வாய்ப்பே இல்லை
அந்தளவுக்கு பண்பாடாக உணர்ச்சியுடன் நடந்த உலக சாதனை
போராட்டம் என்றே சொல்ல வேண்டும். அதுவும் தமிழ் நாட்டுக்கு
இது ஒரு வரலாற்று புரட்சிதான். எனினும் இங்கு பல கேள்விகள்
தோன்றுகிறது
1) பொலிசார் நடந்து கொண்ட முறை சரியா....?
இங்குதான் நீங்கள் சிந்திக்க தவறி விட்டீர்கள். உலகுக்கே
இந்த போராட்டம் அறவழியில் நடைபெற்றது நன்றாக தெரியும்
அதன் வெற்றியும் தெரியும். இதை அரசும் பொலீசாரும் நீங்கள்
விரும்புவதுபோல் கேக் வெட்டி கொண்டாட முடியாது. அப்படி கொண்டாடினால்
இன்னுமொரு போராட்டத்தை நீங்கள் ஆரம்பிப்பீர்கள். இனியொரு போராட்டத்தை
நீங்கள் ஆரம்பிக்கவே கூடது என்பதற்காக வலுகட்டாயமாக .இந்த கலவரத்தை
உருவாக்கி அல்லது அந்த சூழ்னிலையை உருவாக்கி இவ்வாறு செய்தால் தான் இனிமேல் பொற்றோர் இதுபோன்ற போரட்டதுக்கு தம் பிள்லைகளை அனுப்பமாட்டார்கள் என்ற ஒரு ராஜ தந்திரம். இதை நீங்கள் புரிந்து கொள்லுங்கள்.
2) இவ்வறு கலவரம் வந்ததால் தான் மாலை 5 மணிக்கே அவசர கூட்டம் கூடி
நிறைவேற்ரினார்கள் இல்லையேல் ஆறிய கஞ்சி பழங்கஞ்சியாகிவிடும் என்பதற்காக இந்த கலவரம் உருவாக்கப்பட்டது. இங்கு மாணவ்ர்கள் கலவரத்தை
உருவாக்கவில்லை. இல்லையேல் அவர்களை வேன்டுமென்றெ உருவாக்கினார்கள்.
மொத்ததில் மாண்வர் போராட்டம் பூரண வெற்றி. முடிவு அரசியல் நாடகத்தில் முடிந்து விட்டது.
&
புதினம் உலக நாதன்

கமல் அரசியலுக்கு தகுதி அற்றவர்

கமல் அரசியலுக்கு தகுதி அற்றவர்
-----------------------------------------------------
கமல் அரசியலுக்கு தகுதி அற்றவர் : காரணம் அவர் உண்மை நிலவரத்தை பேசுகிறார் அது அரசியலுக்கு இருக்க கூடாத பண்பு. ஆரய்ந்த பின் அப்பட்டமாக
உண்மை பேசுகிறார். எனவே அவர் அரசியலுக்கு தகுதியற்ரவர்.
ரஜனி அரசியகுக்கு தகுதியானவர். ஆராயமல் போராட்ட வாதிகள் மீது பழி போட்டவர். அவர்களே போராட்டத்தை நடாத்துகிறார்கள் என்று உண்மை நிலவரம்
தெரியாமல் உடனே அறிக்கை விட்டவர். இது தானப்பா அரசியலுக்கு தேவையான தகுதி. உணர்வு பற்று எல்லாம் தேவையில்லை. புத்தியில்லாமல் பேசினால் போதும்.எனவெ ரஜனி அரசியதுக்கு பொருத்தமானவர். ஆனால் அவர் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும். இன்னும் திரப்படங்களில் தமிழ் பற்று போல் வீர வசனம்
பாடல்கள் பாடவேண்டும். இதற்கு துணைபோகும் தனியார் தொலைகாட்சிகள். தலைவா என்று இன்னும் புகழாரம் போச வேண்டும்.
இப்படிக்கு
புதினம் உலக நாதன்

எந்திரன் 2 க்கு ரஜனியின் நாடகங்கள்

எந்திரன் 2 க்கு ரஜனியின் நாடகங்கள் இப்படியும் வரலாம்
ஏமாந்துடாதே தமிழா
-------------------------------------------------
1) எந்திரன் முழு வசூலும் தமிழ் நாட்டு விவசாயிகலுக்கு என்று சொனாலும் சொல்லலாம்
2) தமிழ் நாட்டு மக்களுக்கு உழைக்கபோகிறென் என்று சொல்லி தமிழ் நாட்டின்
பிரபல கட்சி ஒன்றில் இணையப்போவதாக பிசுபிசுப்பை ஏற்படுதலாம்
3) கலைஞர் தான் தன் கலையுலக தந்தை என்று சொல்லி ( இப்படி பலமுறை பலருக்கு சொல்லியதை மறந்து) மக்களை ஏமாற்ரலாம்
&
புதினம் உலக நாதன்

தமிழ் நாட்டு மக்கள் தேர்தலில் விட்ட தவறு புரிகிறதா....?

தமிழ் நாட்டு மக்கள் தேர்தலில் விட்ட தவறு புரிகிறதா....?
-------------
இரு பெரும் கட்சியை மட்டும் தெரிந்தெடுத்ததன் விளைவு
இன்று சிறு கட்சிகள் இருந்திருந்தால் இந்த அரசியல் புயலில்
பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் இரு பெரும் கட்சிகளே
பலம் பொருந்தியதன் தாக்கம் இப்போ மக்களுக்கு புரியும். ஒரு ஜனனாயக நாட்டில்பலகட்சி ஆட்சியே சிறப்பாக் இருக்கும் என்பதற்கு இது நல்ல நிகழ்வு


&
அரசியல் ஆய்வாளர்
புதினம் உலக நாதன்

புதினம் உலகநாதன் செய்திகள்

உலக நடப்புகளை என் சொந்த எண்ணத்தில் வருவதை ஆராய்கிறேன்
யாரையும் வருத்துவது என் நோக்கம் இல்லை எதற்கும் ஒரு எதிர் சிந்தனை
இருக்கதானே செய்யும் என்ற எண்ணம் மட்டுமே