Friday, February 10, 2017

அம்மா திராவிட முன்னேற்றகழகம் நிச்சயம் உருவாகும்

அம்மா திராவிட முன்னேற்றகழகம்
 நிச்சயம் உருவாகும்
--------------------------------------------------
தமிழ் நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத அம்மாவின் இழப்பு அண்ணாதிராவிட
கழகத்துக்கு பெரும் நெருக்கடியையும் சவால்கலையும் தோற்றிவித்துள்ளது.
என்பது யாவரும் அறிந்த உண்மையே அடுத்து சில மாதங்களில் பல்வேறு
அரசியல் திருப்பங்கள் ஏற்படபோகிறது என்பது நிச்சயம்
1) கட்சியின் செயலாலர் சசிகலாவை கழகம் ஏற்றால் அ தி மு க உடையும்
அப்போது அம்மா திராவிட முன்னேற்றகழகம் என்னும் புதிய கட்சி உருவாகலாம்.இந்த கட்சியை தோற்றுவிக்க பலகட்சிகள் தூண்டிகொண்டு இருக்கும். இன்று பெரும் கட்சியாக இருக்கும் அ தி மு க தேசிய கட்சிகலுக்கு பெரும் தடையாகஇருக்கிரது. இந்த கட்சியை இரண்டாக உடைத்தாலே தமிழ் நாட்டில் அவர்கள்எதிர்பார்க்கும் வெற்றியை பெறமுடியும்.
2) தற்போதுள்ள முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மக்கள் மத்தியில் முதல்வராக
ஏற்று கொள்ளும் அளவுக்கு தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் மனதில் இடம் பிடிக வில்லை. இரண்டு முறை மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. நியமனம் பேற்ற முதல்வரே. அம்மாவின் சிந்தனையை செயல் படுத்து முதல்வராகவே இருந்தவர். எனவே தனி தீர்மானம் எடுகும் திறன் அவரிடம் இல்லை என்பதே தமிழ் நாட்டுமக்க்கள் மத்தியில் வலுவாக பதிந்துள்ள மறுக்க முடியாத உண்மை. எனவேமக்கள் மத்தியில் ஆளுமையுள்ள முதல்வராக அவர் மாறுவதற்கு காலம் எடுக்கும்.அதற்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும்.
3) இன்னும் சில மாதங்களில் அதிமுக கழகத்தில் இருந்தவர்கள் தி மு க நோக்கி
நகர வாய்ப்புண்டு. சில முக்கிய பிரதி நிதிகள் கூட தி மு க வில் இணைவார்கள்
தி மு க வுக்குள்ளும் பலபிரச்சனைகள் தோன்றும். நிச்சயம் அங்கு குடும்ப சிக்கல்
தோன்றும்.தலைவர் இருக்கும் வரை அக்கட்சியும் ஒன்றாக இருக்கும்.
4) மொத்ததில் தேசிய கட்சிகளின் செல்வாக்கு அடுத்த தசாப்தங்களில் தமிழ் நாட்டில் வலுபெரபோகிரது என்பது மட்டும் உறுதி
&
புதினம் உலக நாதன்

No comments:

Post a Comment